சேலம், ஜன.23: சேலம் தாதகாப்பட்டியில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலில் கடந்த 20ம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் 28ம் தேதி கோயிலில் கொடியேற்றுவிழா நடைபெற உள்ளது. 31ம் தேதி காலை 10 மணிக்கு பால்குட ஊர்வலமும், இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. பிப்ரவரி 5ம் தேதி அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து 6ம் தேதி சத்தாபரண ஊர்வலமும், 7ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
+
Advertisement


