நாசரேத், மே 14: மூக்குப்பீறி அய்யா வைகுண்ட சுவாமி நிழல் தாங்கலில் சித்திரை பால் முறை திருவிழா நடந்தது. நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி அய்யா வைகுண்ட சுவாமி நிழல் தாங்கலில் சித்திரை பால்முறை திருவிழா நடந்தது. இதையொட்டி அய்யாவுக்கு பணிவிடைகள் செய்து உச்சிப்படிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. மாலை பஜனையும், பணிவிடையும் திருவிளக்கு வழிபாடும் நடந்தது. உகப்படிப்பு பாடியபின் திருவிழா நிறைவு பெற்றது.
+
Advertisement


