ராமநாதபுரம், மார்ச் 21: முதுகுளத்தூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே ஆதனகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் கவிநாத்(21). டிரைவர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சோகத்தில் இருந்த கவிநாத், யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் மனவிரக்தி அடைந்த கவிநாத் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


