Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மண் சரிவுகள் தடுப்பது குறித்து; அதிகாரிகள் ஆய்வு கூட்டம்: மாநில திட்டக்குழு ஆணைய நிர்வாகிகள் பங்கேற்பு

ஊட்டி, செப். 29: பல் மருத்துவர்களின் 37வது மாநில மாநாடு குன்னூரில் நடந்தது. குன்னூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பல் மருத்துவர்களின் 37வது ‘சிகரம் 24’ என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, எஸ்பி., நிஷா ஆகியோர் கலந்துக் கொண்டு துவக்கி வைத்து பல் மருத்துவத்தின் முக்கியத்துவம், பல் மருத்துவர்ளின் பங்கு குறித்து பேசினர். மாநாட்டில் செயலாளர் மகேஷ்வர், ஒருங்கிணைப்பு தலைவர் கவுதமன், நீலகிரி மாவட்ட பல் மருத்துவர்கள் சங்கம் தலைவர் இனியன், செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன், செயலாளர் செந்தாமரை ஆகியோர் பேசும்போது, தமிழ்நாடு முழுவதும் இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்துவது, 5 ஆம்புலன்ஸ்கள் கொண்டு வருவது குறித்தும், மாநாடு சிறப்பு பெற டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தை சார்ந்த பல் மருத்துவர்கள் சுமார் 850 பேரும், பல் மருத்துவ மாணவர்கள் 300 பேரும் கலந்து கொண்டனர். மேலும் பல் மருத்துவ நவீன உபகரணங்கள், மருந்துகள் குறித்து 64 அரங்குகள் அமைத்து பிரம்மாண்ட கண்காட்சி இடம் பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் முதல் பல் மருத்துவரான சோப்ராவிற்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டர் கெளதமன் தலைமையில் நீலகிரி மாவட்ட மருத்துவ சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ஊட்டி, செப். 29: தொட்டபெட்டா மலையில் கார்ஸ் முள் செடிகளில் பூத்துள்ள மஞ்சள் நிற மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் எரிபொருள் தேவைக்காக பல்வேறு மரங்கள் மற்றும் தாவரங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வந்து நடவு செய்யப்பட்டன. இதில், கற்பூரம், சீகை, பைன் போன்ற வெளி நாட்டு மரங்கள் அடங்கும். அதேபோல், லேண்டானா, பார்த்தீனியம், கார்ஸ் முள் செடிகள் மற்றும் செஸ்ட்ரம் போன்ற செடிகளும் ஆகும். இச்செடிகள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக, கார்ஸ் முள் செடிகள் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவு காணப்டுகிறது.

தலைகுந்தா, தொட்டபெட்டா, எச்பிஎப்., போன்ற பகுதியில் காமராஜ் சாகர் அணை கரையோரங்களில் பல ஏக்கர் பரப்பளவில் இந்த செடிகள் காணப்படுகிறது. இச்செடிகளில் மஞ்சள் நிறத்தில் மலர்கள் பூக்கும். தொலைவில் இருந்து பார்த்தில் மஞ்சள் நிற போர்வை போர்த்தியது போல் இந்த மலர்கள் காட்சியளிக்கும். இந்நிலையில், தொட்டபெட்டாவில் சாலை ஓரங்களில் மற்றும் வனப்பகுதிகளில் இச்செடிகளில் தற்போது மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் காணப்படுகிறது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். சில இடங்களில் சாலையோரங்களில் காணப்படும். இந்த முள் செடிகள் அருகே நின்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.