கோவை, ஜன. 14: பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகிய இடங்களில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் பாரம்பரியமான வேட்டி, சட்டை, சேலையில் கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பொங்கல் வழங்கி பண்டிகை சிறப்பிக்கப்பட்டது.
+
Advertisement


