Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெரியாரை தொடர்ந்து அவதூறு செய்யும் சீமானை கைது செய்ய வேண்டும்

தஞ்சாவூர், ஜன.23: பெரியாரை தொடர்ந்து அவதூறு செய்து வரும் சீமானை கைது செய்ய வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு வாழ்வுரிமை இயக்கத்தின் மத்திய மண்டல பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மத்திய மண்டல பேரவை கூட்டம் நேற்று தஞ்சாவூர் தெற்கு வீதி வங்கி ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் மத்திய மண்டல பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட பொருளாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அழகு.தியாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தேசிய செயலாளர் லெனின் அகில இந்திய மாநாட்டு தீர்மானத்தையும், தமிழ்நாடு அரசில் பாதிக்கப்பட்டு வருகின்ற ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை குறித்தும் சிறப்புரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, ஆகியோர் பேசினர். பேரவையில் தந்தை பெரியார் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் சீமான் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நோக்கில் கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அப்படிப்பட்ட அவதூறு கருத்துக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 1892-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பஞ்சமி நிலம் சம்பந்தமான சட்டத்தின்படி அந்த நிலங்கள் பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்து, முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பேரவையில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இள.குமணன் திருச்சி புறநகர் செல்வராஜ் மயிலாடுதுறை ஜெகதீசன், மாநில குழு உறுப்பினர்கள் சி.பக்கிரிசாமி, குணசேகரன், கவிஞர்கள் சிவலதா, கலைசேகரன், பேராசிரியர் ஓய்வு கோ.பாஸ்கர், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் க.காரல் மார்க்ஸ் நன்றி கூறினார்.