பெரம்பலூர், ஜன.23: பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று 121 ஊராட்சிக ளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுபற்றி, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் செய்திக்குறிப்பு விவரம்: பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினமான வருகிற 26ஆம்தேதி நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில், அனைத்து கிராமசபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதைக் கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல், மக்கள் திட்ட மிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2025-26-ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத் திற்கு ஒப்புதல் பெறுதல், இதரபொருட்கள் ஆகிய கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.
குடியரசுதினமான வருகிற 26ஆம்தேதி நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம சபா உறுப் பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவ ரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறைத் தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். கிராமசபைக் கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண் காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர் கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக் கூட்டம் நடைபெறு வதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தினமான 26ஆம் தேதி கிராமசபைக் கூட்டத்தில் கிராமசபா உறுப்பினர்களாகிய வாக் காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சி களின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப் பூர்வமான ஊராட்சி நிர்வா கம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டு மென மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


