திருவண்ணாமலை, ஜன.5: திருவண்ணாமலை கோர்ட் வளாகத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை டவுன் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி. இவர், போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வம் என்பவரை விசாரணைக்காக திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோடா சிறப்பு கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்று, நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்து பன்னீர்செல்வத்தின் உறவினரான, திருவண்ணாமலை எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், எஸ்ஐ பாக்கியலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் எஸ்ஐ பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை நேற்று கைது செய்தனர்.
+
Advertisement


