ராசிபுரம், ஜன.11: ராசிபுரம் நகராட்சி ஊழியரை மிரட்டியவர் மீது, நகராட்சி ஆணையாளர் போலீசில் புகாரளித்துள்ளார். ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன், பழக்கடை வைத்துள்ளார். இவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை ராசிபுரம் நகராட்சியிடம் கேட்டு மனு செய்துள்ளார். மனுவில் உள்ள சில தகவல்களை பெற மாதேஸ்வரன் நகராட்சிக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்து மேனேஜர் ராமச்சந்திரனுக்கும், மாதேஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ராமச்சந்திரனை தரக்குறைவாக பேசியதுடன் பணி செய்ய விடாமல் மாதேஸ்வரன் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கணேஷ், ராசிபுரம் போலீசில் புகாரளித்தார். அதில், நகராட்சி ஊழியரை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார், 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


