தேவகோட்டை, நவ. 14: தேவகோட்டை தனியா்ர மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா வரவேற்றார். தேவகோட்டை நகர போக்குவரத்து காவல் சிறப்பு ஆய்வாளர் கலா பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது, வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துசெல்ல வேண்டும், சாலை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் யாதவா அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


