தஞ்சாவூர், ஜன.26: நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 129 வது பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி மறியாதை செலுத்தினர். தஞ்சை காந்திஜி சாலையில் ஐ.என்.ஏ., வாரிசமைப்பின் மாநில தலைமை அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அலுவலக வாசலில் வைக்கப்பட்டு இருந்த நேதாஜி புகைப்படத்திற்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஐ.என்.ஏ வாரிசமைப்பின் மாநில தலைவர் வேலுசாமி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீர வரலாற்றின் எதிர்கால இளைய தலைமுறைக்கு அனைவரும் கொண்டு செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் தமிழ் பல்கலைக்கழக துணை பதிவாளர் பன்னீர்செல்வம் லயன்ஸ் தலைவர் பிரபு மற்றும் தியாகிகளின் வாரிசுகளான சுப்பிரமணியன் ஆனந்த் சிவகுமார் பார்த்திபன் வடிவேல் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.


