நெலாக்கோட்டை அரசு பள்ளி அருகே பயன்படுத்தப்பட்ட ஊசிகள் வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
பந்தலூர், நவ.5 : பந்தலூர் அருகே நெலாக்கோட்டை அரசு பள்ளி அருகே பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்தது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளி, கால்நடை மருத்தகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. தினம் தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளி அருகே பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஊசிகள் கிடந்துள்ளது.
அதனை சுகாதாரதுறையினர் பார்வையிட்டு ஆரம்ப சுகார நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட ஊசிகளா என ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் பயன்படுத்தியவை இல்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி அருகே போதைக்காக ஊசிகளை பயன்படுத்தி விட்டு யாராவது வீசிச்சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


