ஊட்டி, மார்ச் 20: ஊட்டியில் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட மாணவர்கள் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திமுக., தலைமை அறிவிப்பன்படி நீலகிரி மாவட்டத்தில் மாணவர் அணி சார்பில் மாணவர் மன்றம் அமைப்பது எனவும், இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஜெகதீசன், அசார்க்கான், சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


