Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்

அரியலூர், ஜூன் 15: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தில் முன்னாள் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு கழக சட்டத்திட்ட திருத்தகுழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், சிவராஜேஸ்வரி சிவசுப்ரமணியன், எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் கண்ணன், அரியலூர் சின்னப்பா, தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.சிவகுமார், மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் துரைசாமி, மாநில வர்த்கர் அணி துணை அமைப்பாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் கணேசன், அருங்கால் சந்திரசேகர், லதாபாலு, அரியலூர் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மணிமாறன், அசோகசக்ரவர்த்தி, ரெங்க முருகன், அன்பழகன் , கலியபெருமாள், எழில்மாறன், நகர செயலாளர்கள் கருணாநிதி, முருகேசன்,பேரூர் கழக செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன்,

அல்போன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, திருமானூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோகசக்ரவர்த்தி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா,அரியலூர் நகர்மன்ற துணை தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் இளஞ்செழியன், ராமராஜன், தங்கை.எழில்மாறன், கழக வழக்கறிஞர்கள் மணிமாறன், ராஜா, முத்தமிழ்செல்வன், சசிகுமார், பாலா,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்தபகலவன், கழக நிர்வாகிகள் முரசொலிகுமார், கொளஞ்சியப்பா, பிரபாகரன், செந்தில்குமார், குணா , மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக கழக நிர்வாகிகள், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி, வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், இலந்தங்குழி ஊராட்சி மன்ற தலைவர் அகிலா ராமசாமி, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், இளைஞரணி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டு முன்னாள் எம்.பி. எஸ். சிவசுப்பிரமணியன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.