Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் மலைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா?

வருசநாடு, ஜூலை 15: வருசநாட்டிலிருந்து தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் கிழவன் கோவில் பிளவக்கல் மலைசாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றப்படுமா என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வருசநாட்டிலிருந்து, விருதுநகர் மாவட்டம் கிழவன் கோவில்-பிளவக்கல்லை இணைக்கும் வகையில் மலைச் சாலை அமைக்க 30 ஆண்டுகளுக்கு முன்பு உத்தேசிக்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக அந்தத் திட்டம் முன்னெடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் நிலை உள்ளது. இந்தப் பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மலைப் பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.