ஏரல், மார்ச் 7: ஏரல் அருகே உள்ள திருவழுதிநாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் ஆலயத்தில் நற்செய்தி கூட்டம் நடந்தது. பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து, தூத்துக்குடி குரூஸ்புரம் பங்குதந்தை கிங்ஸிலி, வீரபாண்டியபட்டினம் பங்குதந்தை சுதர்சன் ஆகியோர் தலைமை வகித்து நற்செய்தி, திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர் நடத்தினர். இதையடுத்து கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அசன விருந்து நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி, குரும்பூர், சேதுக்குவாய்த்தான், அதிசயபுரம், கொற்கை, புன்னக்காயல், முக்காணி, தூத்துக்குடி மற்றும் ஏரல் பகுதி இறைமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
+
Advertisement


