திருத்துறைப்பூண்டி, டிச. 13: திருத்துறைப்பூண்டி அருகே வெங்காய தாமரை செடிகளை இயந்திரம் மூலம் அகற்றி நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். திருத்துறைப்பூண்டி - திருவாரூர் செல்லும் சாலையில் வேளூர் பாலம் அருகில் அடப்பனாறு பாலம் இருபுறமும் வெங்காய தாமரை செடிகள் மண்டி கிடப்பதால் பாலத்தின் கீழ் அடைந்து கொண்டு தண்ணீர் போக முடியாது படி இருந்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின்பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி வழிகாட்டுதலின் படி திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலைத்துறை மூலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அய்யாதுரை, இளநிலை பொறியாளர் ரவி தலைமையில் சாலை ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் சாலை பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் வெய்காயதாமரை செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தண்ணீர் தடையில்லாமல் எளிதாக செல்கிறது


