Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் காலியாக உள்ள வீடுகளை ஏழைகளுக்கு ஒதுக்க கோரி மனு

திருப்பூர், நவ.5: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனுப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை. நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூரில் தந்தை பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இங்கு வீடு ஒதுக்கியதில் வீடு பெற்ற உரிமைதாரர்கள் உள் வாடகைக்கு விட்டும், அடமானம் வைத்தும் வருகின்றனர்.

வசதி பெற்றவர்கள் முறைகேடாக வீடுகளைப் பெற்றுக் கொண்டு குடி இருக்காமல் வாடகைக்கு விடப்பட்டிருப்பதாகவும், வாடகைக்கு வீடு எடுத்தவர்கள் ஆடு மாடுகளை அந்த வீட்டில் பராமரிக்கும் காரணத்தால் கொசு மற்றும் பூச்சிகள் உற்பத்தியாகி அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் உரிமை பெற்று உள் வாடைக்கு விடப்பட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களின் உரிமையை ரத்து செய்து வீடு இல்லாத ஏழை மக்களுக்கு தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அங்கு இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.