ஆண்டிபட்டி, ஜன. 24: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த அன்புச் செல்வம்(55) மற்றும் அவரது மகன் பிரவீன்(26) இருவரும் டூவீலரில் தேனிக்கு சென்று விட்டு மீண்டும் ஆண்டிபட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த பிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ரகுநாத்(24)பிரவீன் ஓட்டி சென்ற டூவீலரில் மோதிய விபத்தில் தந்தை, மகன் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் பிரவீன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரகுநாத் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


