மோகனூர், டிச.25:மோகனூர் அருகே உள்ள லத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லையாகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பூபதி (44). டாஸ்மாக் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி. இவர்கள் மகன், மகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினர் வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 6 பவுன் நகை மற்றும் ₹55 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மோகனூர் போலீசில் பூபதி புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement


