சேலம், அக்.25: சேலம் மாநகரை மாசின்றி வைத்திருக்கப் பாடுபடும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் “மகிழ்வித்து மகிழ்” தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கன்னங்குறிச்சி நகர பஞ்சாயத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், புத்தாடைகளும் இனிப்பு பலகாரங்களையும் கல்லூரியின் தலைவர் சரவணன் வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், முதல்வர் பேகம் பாத்திமா, டீன் கீதா மற்றும் கல்லூரியின் ஊழியர்கள் பங்கேற்றனர்.
+
Advertisement


