திருப்பூர், டிச.11: திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது பனியன் நிறுவன தொழிலாளி தனது உறவினர் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அங்கு தனது தங்கை முறையான 16 வயது பள்ளி மாணவியிடம் நைசாக பேசி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த மாணவி பள்ளிக்கு சென்றார்.
மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியை விசாரிக்க அதன் பிறகே உறவினர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து குழந்தைகள் நலக்குழு மூலம் திருப்பூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.


