திருப்பூர், ஜன.22: திருப்பூர் பிஎன்ரோடு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு (21). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சந்துரு அப்பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காதலித்து வந்தார். மேலும், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சேலம் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், மகளிர் போலீசார் சந்துருவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
+
Advertisement


