க.பரமத்தி, பிப்.17: சின்னதாராபுரம் அருகே பனையம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற வழக்கில் பெண் மீது சின்னதாராபுரம் போலீசார் வழக்குபதிந்து கைது விசாரித்து வருகின்றனர்.
சின்னதாராபுரம் அடுத்த பனையம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சின்னதாராபுரம் எஸ்ஐ அழகுராமு மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது அம்பேத்கர்காலனியை சேர்ந்த ராமசாமி மனைவி மகேஸ்வரிசக்தி (40) என்பவர் அதே பகுதியில் மது விற்பனைக்காக 27 பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் சின்னதாராபுரம் போலீசார் மகேஸ்வரிசக்தி மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


