நாகப்பட்டினம்,ஜூலை29: சிக்கல் அருகே பொருள்வைத்தச்சேரி கீழத்தெருவில் பழமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவிழா சிறப்புடன் நடைபெறும். அதன்படி நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. முத்து மாரியம்மன் ஆலயத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் நிற ஆடை உடுத்தி பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. தொடர்ந்து காப்புக்கட்டிக் கொண்ட பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபாடு செய்தனர். ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்காவடி ஊர்வலம், அம்மன் புறப்பாடு ஆகியவை வரும் 4 ம் தேதி நடைபெற உள்ளது.
+
Advertisement


