பாப்பிரெட்டிபட்டி, ஏப். 29: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி(47). இவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக, பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், சிவசக்தி வீட்டில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்ேபாது அவர் சந்து கடையில் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிவசக்தியை கைது செய்த போலீசார், விற்பனைக்கு பதுக்கிய 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


