கோவை, நவ. 10: ேகாவை மாநகராட்சி சார்பில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான `மக்களை தேடி’ சிறப்பு முகாம் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 10வது வார்டு சரவணம்பட்டி-காளப்பட்டி சாலை எஸ்.எம்.எஸ். மஹாலில் நாளை (திங்கள்) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறார். இம்முகாமில், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சியின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
எனவே, ``பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் தொடர்பாகவும், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம். இம்முகாம், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெறும்’’ என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.


