திருவள்ளூர், டிச. 8: திருவள்ளூர் அடுத்த திருமேணிகுப்பம் கிராமம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(49). சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். முருகன் தனது மாத சம்பளத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு, தினசரி பணம் வாங்கிக்கொண்டு மது அருந்துவது வழக்கம். இவரது மதுப் பழக்கத்தினால் அடிக்கடி குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் மனைவியிடம் தகராறு செய்து குடிப்பதற்கு பணம் வாங்கிக்கொண்டு மதுபான கடைக்கு சென்று மது வாங்கியுள்ளார். அந்த மதுவில் அதில் அரளி விதையை கலந்து குடித்து மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து முருகனை மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து முருகனின் மகன் கோட்டீஸ்வரன் மப்பேடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


