Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

காஞ்சிபுரம், டிச.13: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே மூடங்கியதால், அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டதால் முக்கிய சாலைகளை தவிர பெரும்பாலான சாலைகள் வெறிச்சேடி காணப்பட்டன.

வங்கக் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக்கியுள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றும், இன்றும் மழை பெய்து வருகிறது. ஆனால், நேற்றும், இன்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் இருந்து விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக காஞ்சிபுரம், பெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. சாலைகள் முழுவதும் வெறிச்சோடி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது என மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோயில் தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக செல்கிறது.

அதேபோல, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆவா குட்டை தெரு, லிங்கப்பன் தெரு, முருகன் காலனி பல்லவர் மேடு போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால், பாதசாரிகள் மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்து மழையினால் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் நீர் வரத்து வந்துக்கொண்டு இருக்கிறது. மேலும் நேற்று (12.12.24) பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காஞ்சிபுரம் காந்தி ரோடு, காமராஜர் வீதி, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, வேலூர் செல்லும் சாலை, ரங்கசாமி குளம், டிகே நம்பி தெரு, செங்கழுநீர் ஓடை வீதி, பூக்கடை சத்திரம் பகுதி போன்ற சாலைகள் மக்கள் நடமாட்டம் என்று வெறிச்சோடி கிடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு வரும் வருமாறு:-காஞ்சிபுரம் 32.60 மிமீ, உத்திரமேரூர்-8.80, வாலாஜாபாத் 12.00, பெரும்புதூர் 38.00மிமீ, குன்றத்தூர் 31.00 மிமீ, செம்பரம்பாக்கம் 37.60மிமீ என மழை அளவு பதிவாகியுள்ளது.