ஊட்டி, நவ.30: ஊட்டி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவியர்களிடம் தங்கும் அறை, சமையலறை, உணவுக்கூடம், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்புகள், மாணவயிர்கள் தங்கும் விடுதியின் அடிப்படை வசதிகளை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவியர்களுக்கு ஜமக்காளங்களை வழங்கினார்.
மாணவியர்களிடம் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், ‘தமிழ் புதல்வன் திட்டம்” மற்றும் ‘நான் முதல்வன் திட்டம்” குறித்து மாணவியர்களிடம் எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்திய போது விடுதியில், தங்கி பயலும் மாணவியர்கள் ‘புதுமை திட்டத்தின்” நாங்கள் பயன் பெற்று வருவதாகவும், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன், விடுதி காப்பாளர் ஜம்ரூத் ஆகியோர் உடனிருந்தனர்.


