கரூர், மார்ச். 3: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி ரோடு அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி ரோடு அருகேயுள்ள ஒரு டீக்கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்டனர். அங்கு 400 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடையில் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்ய முயன்றவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement


