கரூர், டிச. 13: கரூர் ராயனூர் சாலையில் கூடுதல் மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் ராயனூர் சாலையில் திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பயணித்து வருகின்றன. இந்த பகுதியில் அதிகளவு குடியிருப்புகளும் வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.
ஆனால், பிரதான, மாநகர பகுதியில் உள்ள இந்த பகுதியில் கரூர் ராயனூர் சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை மின் விளக்கு வசதி குறைவு காரணமாக கும்மிருட்டாகவே காணப்படுகிறது. போதிய வெளிச்சம் குறைவு காரணமாக இரவு நேரங்களில் வாகன விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, இதுபோன்ற இன்னல்களை தவிர்க்கும் வகையில் கரூர் ராயனூர் சாலையில் கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


