Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கரும்பு டன்னுக்கு கொள்முதல் விலையாக ரூ.4,000 வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு,அக்.5: கரும்பு டன்னுக்கு கொள்முதல் விலையாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.  கவுந்தப்பாடியில் கரும்பு வளர்ப்போர் சக்தி சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என்கேகே பெரியசாமி தலைமை தாங்கினார்.நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அருணாசலம், சண்முகதரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் குப்புசாமி வரவேற்றார். பொருளாளர் சிவசங்கர் ஆண்டறிக்கை சமர்பித்தார்.

கூட்டத்தில் கரும்பு உற்பத்தி செலவை கணக்கிட்டு, வரும் அரவை பருவத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.4,000 ஆயிரம் வழங்க ஒன்றிய,மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது, கரும்பு கட்டுப்பாட்டு சட்டப்படி அக்டோபர் 1ம் தேதி முதல் வெட்டப்படும் கரும்புக்கு கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க ஆலை நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது,பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அந்தியூர் பகுதிகளுக்கு மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.