திருச்செங்கோடு, பிப்.6: கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 40வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இயக்குனர்கள் சிவா, வித்யா சிவா முன்னிலை வகித்தனர். பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் ஆசிரியர்களான திலகமணி, சுகுணா, கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், செந்தில் வடிவு, தேன்மொழி, பாப்பாத்தி, பூரணசந்திரிகா, செல்வராஜ், சிவக்குமார், பாலுசாமி, சந்திரோதயம் கோகிலா, அன்பரசி ஆகியோருக்கு தாளாளர் சண்முகசுந்தரம் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


