Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கட்டிமேடு அரசு பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தின முகவுரை வாசிப்பு

திருத்துறைப்பூண்டி, நவ. 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியை சு.உஷா பேசுகையில், 1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாடி வருகிறோம். வரைவு குழு தலைவராக சட்டமேதை டாக்டர். அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டது. இது உலகிலேயே நீளமான அரசியலமைப்பு கொண்டதாகும். நெகிழும் தன்மை, கூட்டாட்சி தன்மை உடையது.

அரசியலமைப்பின் சிறப்பு கூறுகள் ஒன்று சமய சார்பற்றவை. நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை அரசாங்கத்தின் நான்கு தூண்களாக செயல்படுவது நமது அரசியலமைப்பு அமைப்பில் கூறப்பட்ட உன்னதமான சிறப்பு. மேலும் இரண்டு வருடம் 11 மாதங்கள் 18 நாட்கள் உலகின் தலைசிறந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி நவம்பர் 26 ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் என்றார். நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை மாணவ, மாணவிகளுக்கு வாசிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் கபிர்தாஸ் நன்றி கூறினார்.