கடத்தூர், நவ.22: கடத்தூர் பேரூராட்சி 3வது வார்டு பகுதிகளில், மாவட்ட பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கணேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சியில் குடிநீருக்காக பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீரில் உள்ள புளோரைடு அளவை ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஒகேனக்கல் குடிநீர் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், பேரூராட்சி வார்டு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் பிரித்து வாங்கும் முறைகள் குறித்து, பேரூராட்சி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயாசங்கர், பேரூராட்சி தலைவர் கேஸ்மணி, உதவியாளர் மோகன், பச்சையப்பன், மாதன், சங்கர், கண்ணன், ரகுநாத், விஜி ஆகியோர் உடனிருந்தனர்.
+
Advertisement


