தஞ்சாவூர், அக்.8: ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி தஞ்சாவூரில் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து புறப்பட்டு மாநகராட்சி காந்தி சிலை வரையில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார்.
தஞ்சை மாவட்ட மேலிட பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பேராவூரணி சிங்காரம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மாநில துணைத்தலைவர் பண்ணவயல் ராஜாதம்பி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குணா பரமேஸ்வரி, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் வழக்கறிஞர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜு, கதர் வெங்கடேசன், ஊடக பிரிவுத் தலைவர் பிரபு, வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, இப்ராஹிம்ஷா, சுரேஷ், மாநகர, மாவட்ட துணைத்தலைவர் செந்தில் பழனிவேல், மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.


