Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஐகோர்ட் தலைமை நீதிபதியுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

புதுச்சேரி, அக். 21: சென்னை உயர்நீதிமன்ற தலைமை‌ நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று காலை புதுச்சேரி வருகை புரிந்தார்.  அவரை முதல்வர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ., தலைமை செயலர்‌ சரத் சவுகான், செய்தி விளம்பரத்துறை செயலர் கேசவன், புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன், சட்டத்துறை செயலர்‌‌ சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.  முன்னதாக, தலைமை நீதிபதியை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து

வரவேற்றனர்.