தர்மபுரி, மே 6: தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி சார்பில், குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்து அமல்படுத்தக் கோரி, நேற்று தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாநில தலைவர் காசி விஸ்வநாதன், தேவராஜன், கலைச்செல்வம், தமிழ்குமரன் உள்ளிட்டோர் பேசினர். காரல் மார்க்ஸ் தினத்தை முன்னிட்டு, அறிவியல் அடிப்படையில் வேலைக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
+
Advertisement


