கரூர், பிப். 6: மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடப்பதாக கலெக்டர் தெரிவித்தார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம், கட்டளை குறுவட்டம், பாலராஜபுரம் கிராமத்தில், பிப்ரவரி 6ம்தேதி (இன்று) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பல்வேறு அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். மேலும், மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி போன்றவை நடைபெறவுள்ளன. எனவே, பாலராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)
கரூர் துணை மின்நிலைய கேவிபி நகர்
பெரியார் நகர், காந்திபுரம், வையாபுரி நகர் 2வது தெரு, கேவிபி நகர், எம்ஜி ரோடு, கணேசா நகர் மற்றும் விஜய நகர் ஆகிய பகுதிகள்.
வேப்பம்பாளையம் துணை
மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகள்
சஞ்சய் நகர், ஆத்தூர்ர் பிரிவு, செல்லரபாளையம், மருத்துவ நகர், வேலுசாமிபுரம், அரிக்காரன்பாளையம், திருக்காம்புலியூர் உள்ளிட்ட பகுதிகள்.


