Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அம்பையில் கடன் தகராறில் தந்தை, மகள் மீது தாக்குதல்

அம்பை,டிச.9: அம்பையில் கடனை கேட்டு தந்தை, மகள் மீது தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி முருகேஸ்வரி. இவர் 2 ஆண்டுகளுக்கு முன் கடையநல்லூர் மாவடிக்கால் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சுமணி மகன் பெத்துராஜ் என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். கடந்த ஒராண்டாக மாதந்தோறும் பணத்தை கட்டி வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ரூ.2,500 மட்டும் திருப்பி செலுத்த முடியவில்லை.

இதையடுத்து நேற்று பெத்துராஜ் மற்றும் சுப்பிரமணியபுரம் பொத்தை முல்லைத்தெருவைச்சேர்ந்த சங்கரன் மகன் குமரேசன் ஆகியோர் முருகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அவரது தந்தை ஆவுடையப்பனிடம் முருகேஸ்வரி எங்கே எனக்கேட்டு தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த முருகேஸ்வரியையும் அவர்கள் அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஆவுடையப்பன் அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மேதாஜி சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து பெத்துராஜ், குமரேசன் ஆகியோரை கைது செய்தார்.