வில்லிபுத்தூர், ஜூலை 4: வில்லிபுத்தூர் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிகளில் தேசிய மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். இயக்குநர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மருத்துவர்கள் விஜூ ஆண்டோ பிரபு, கிரேஸ், மகேஸ்வரி ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ அலுவலர் காளிராஜ் உள்ளிட்ட மருத்துவர்களுக்கு, இனிப்புகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். துணை முதல்வர் பாண்டீஸ்வரி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.