வில்லிபுத்தூர், மார்ச் 4: வில்லிபுத்தூர் அருகே ரயிலில் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லிபுத்தூர் அருகே உள்ள இடையபொட்டல்பட்டி ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன்(64). இவர் வில்லிபுத்தூர் ராஜபாளையம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதாக வில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று ரயில்வே போலீசார் பார்த்த போது, முதியவர் மாரியப்பன் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். ரயில்வே போலீசாரின் விசாரணையில், அவர் செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.