வில்லிபுத்தூர், மே 31: வில்லிபுத்தூர் அருகே சாலையில் தேவைக்கு அதிகமாக அமைக்கப்பட்ட வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
வில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தங்குளம் வழியாக சத்திரப்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான வேகத்தடைகள் இருப்பதாக புகார்கள் வந்தன. எனவே இந்த பகுதியில் உள்ள அதிகளவு வேகத்தடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்
டார். இதன் அடிப்படையில் நெடுஞ்சாலை துறையினர் தேவைக்கு அதிகமாக உள்ள அனைத்து வேகத்தடைகளையும் அப்புறப்படுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.