வில்லிபுத்தூர், மே 28: வில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. வில்லிபுத்தூர் நகர் மற்றும் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. இதனால் மலைப்பகுதி நீர்வழித் தடங்களில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில், 3வது நாளாக நேற்று காலையிலும் தொடர் சாரல் மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது.
தொடர் மழையால் வில்லிபுத்தூர் பகுதியில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. வில்லிபுத்தூர் நகரில் 19.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.