வில்லிபுத்தூர், ஆக.20: வில்லிபுத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை வில்லிபுத்தூர் ஏரியா, சித்தாலம்புத்தூர், குட்டத்தட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியார்பட்டி, காதிபோர்டு காலனி, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.