திருச்சி: ரங்கம் அரசுக் கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
திருச்சி ரங்கம் அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.மலையாளமூர்த்தி பணி நிறைவு பாராட்டு விழா கல்லூரி வளாக கூட்டரங்கில் ஜூன் 30ம்தேதி (திங்கட்கிழமை) நடைபெற்றது. விழாவில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும் பல்வேறு அரசு பொறியியற் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு பொறியியற் கல்லூரி மாணவர் சேர்க்கை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முனைவர் இரா.மலையாளமூர்த்தியின் 37 ஆண்டு கால ஆசிரிய மற்றும் நிர்வாகப் பணியினை நினைவு கூர்ந்து வாழ்த்தி பேசினர். விழா முடிவில் இரா.மலையாளமூர்த்தி ஏற்புரை நிகழ்த்தினார்.