கடலூர், ஆக. 29: தேசிய நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 1,2,3,4,5,6,10 வார்டு பகுதியில் ரூபாய் 95 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகளை மேயர் தொடங்கி வைத்தார். கடலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பிரதானமாக சாலை பணிகள் அமைந்துள்ளது. இதில் ஒரு பகுதியாக மாநகராட்சி வார்டு பகுதிகளில் ரூ.95 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நான்கு மற்றும் ஐந்தாவது வார்டு உள்ளடங்கிய பகவதி அம்மன் கோயில் வீதியில் ரூ.35 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார். மாநகர திமுக செயலாளர் ராஜா, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மண்டல குழு தலைவர் சங்கீதா குமரன், திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் சலீம், பகுதி துணை செயலாளர்கள் லெனின், மாமன்ற உறுப்பினர்கள் சரிதா, பார்வதி ஐயா சாமி, வட்ட செயலாளர் அருள், ஜீவன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.