நாமக்கல், ஆக.24: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையின் மாமுண்டி உபகிளையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் 302 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். சுரபி ரகம் குவிண்டாலுக்கு ₹8100 முதல் ₹8379 வரையிலும், பி.டி., ரகம் ₹6690 முதல் ₹7699 வரையிலும் என மொத்தம் ₹7லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. அடுத்த ஏலம் வருகிம் 30ம் தேதி நடைபெரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் மல்லசமுத்திரத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது.
₹8.75 லட்சத்திற்கு கொப்பரை, பருத்தி ஏலம்
previous post