ராசிபுரம், ஆக.18: ராசிபுரம் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பருத்தி ஏலம் மற்றும் மஞ்சள் ஏலம் நடத்துவது வழக்கம். அதன்படி, ஆர்.கவுண்டம்பாளையம் ஏலம் மையத்தில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. புதுப்பாளையம், பட்டணம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆர்.சி.எச். ரகம் குவிண்டால் ₹7.003 முதல் ₹7,522 வரையிலும், கொட்டு ரகம் ₹3,215 முதல் ₹4,717 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் 250 மூட்டை பருத்தி ₹8 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் கோவை, அவிநாசி, அன்னூர், சேலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் பங்கேற்றனர்.
₹8 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
previous post